Gmail பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி – Google தற்போது நீண்ட காலமாக எதிர்பார்த்த Gmail username மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரியை மாற்றி, புதிய username-ஆ பயன்படுத்த முடியும்.
இந்த வசதி உங்கள் பழைய முகவரியை alias மாதிரி வைத்துக் கொண்டு, முந்தைய மின்னஞ்சல்கள் இன்னும் inbox-க்கு வருவதற்கான வசதியையும் தருகிறது.
முக்கிய அம்சங்கள்:
- Gmail username-ஐ மாற்ற முடியும்.
- பழைய முகவரி alias மாதிரி செயல்படும்.
- ஒருவருக்கு மொத்தம் 3 முறை மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு மாற்றத்திற்குப் பிறகு 1 வருடம் காத்திருக்க வேண்டும்.
- இ வசதி gradual rollout மூலம் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது; இதனால் சில பயனர்கள் இன்னும் காத்திருப்பர்.
கவனிக்க வேண்டியவை:
- Gmail-ல் உள்ள Emails, Google Drive, Photos போன்ற தரவுகள் delete ஆகாது.
- முக்கிய accounts (Facebook, YouTube, Online Payments) Gmail-ஐ பயன்படுத்தி login ஆக இருந்தால், username மாற்றும் முன் backup / auto-forward செட்டிங் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- உங்கள் Gmail-ல் இந்த வசதி கிடைக்கிறதா என்பதை Settings → Personal info → Email பகுதியில் சரிபார்க்கலாம்.
இந்த update-ஐ பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல் முகவரியை professional, easy-to-remember அல்லது personal purpose-க்கு விரும்பியபடி மாற்றலாம். இது Gmail பயனர்களுக்கு மேலும் flexibility மற்றும் control வழங்கும் நல்ல வசதியாகும்.


